தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தருமபுரி மாவட்டத்தில் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் மேற்கொண்டார். பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள செயின்ட் லோர்டெஸ் தேவாலயத்தில் உள்ள மேரி மாதா சிலைக்கு மாலை அணிவிக்க முயன்றார்.

அப்போது அப்பகுதி கிறிஸ்தவ இளைஞர்கள் சிலர் அவரை தடுத்து நிறுத்தி ‘மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தில் கிறித்தவ மக்கள் உயிரிழக்கவும், தேவாலயங்கள் இடிக்கப்பட்டதற்கும் அங்குள்ள பாஜக அரசு தான் காரணம். எனவே, புனிதமான இடமான எங்கள் தேவாலயத்துக்குள் நீங்கள் வரக்கூடாது’ என்று வாக்குவாதம் செய்தனர்.

பின்னர், போலீசார் அந்த இளைஞர்களை அகற்றிய நிலையில் அவர் தேவாலத்தில் வழிபாடு நடத்திச் சென்றார்.

இந்நிலையில், பொம்மிடி காவல் நிலையத்தில் இது தொடர்பாக கார்த்திக் (28) என்ற இளைஞர் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது பொம்மிடி போலீஸார், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வெவ்வேறு வகுப்புகளிடையே பகை மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கதுடன் பேசியது உள்ளிட்ட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் (153 (ஏ), 504, 505(2)) நேற்று (ஜன. 10) வழக்குப்பதிவு செய்தனர்.

RELATED ARTICLES

Recent News