மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தங்களுக்கு நடந்த கொடூரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) தலைமையில் சுதந்திரமான சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். மாநில போலீசார் மீது நம்பிக்கையில்லாததால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளனர்.