சந்திரயான்-3 விண்கலம் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், சந்திரயான்-3 விண்கலம் முதன் முதலில் பதிவிட்ட புகைப்படம் என்று நபர் ஒருவர் டீ ஆற்றுவதைப்போன்ற படத்தை பிரகாஷ்ராஜ் நேற்று வெளியிட்டிருந்தார். இந்த ட்விட்டர் பதிவு சர்ச்சையை கிளப்பியது.
இதையடுத்து நடிகர் பிரகாஷ்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து அமைப்பினர் கர்நாடகாவில் புகார் மனுவை அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பிரகாஷ் ராஜ் மீது பாகல்கோட் மாவட்ட காவல்துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.