மதுரை தொகுதி எம்.பி. சு. வெங்கடேசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக, பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
பாஜக நிர்வாகிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவதால் அக்கட்சியினர் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில் தஞ்சாவூரில் நேற்று நள்ளிரவில் குடிபோதையில் தாறுமாறாக ஓடிய காரை, ரோந்து பணியில் இருந்த காவலர் விரட்டிச் சென்று பிடித்தனர். அப்போது ஹரிதாஸ், காரல் மார்க்ஸ் இருவரும் ஆபாச வார்த்தைகளால் காவலரை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இவர்கள் இருவரும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள்மீது மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.