‘நீங்க என்ன ஆளுங்க..’ – சாதியை காரணம் காட்டி வீடு தர மறுத்த ஹவுஸ் ஓனர்!

இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது சாதி. இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு, பல்வேறு சட்டங்களை நீதித்துறையும், அரசும் இயற்றி வந்தாலும், இன்றளவும் தொடர்ந்துக் கொண்டு தான் உள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்திலும் இதனை நிரூபிக்கும் வகையில், சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள சி.எம்.சி பகுதியில் இருந்து, பைந்தூர் பகுதிக்கு, தூய்மை பணியாளர்கள் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர்.

கோரகா பழங்குடியினத்தை சேர்ந்த அவர்கள், பணியிட மாற்றத்தின் காரணமாக, இருப்பிடத்தையும் மாற்ற முடிவு செய்துள்ளனர். இதனால், பைந்தூர் பகுதியில் வீடு வாடகைக்கு கேட்டு வந்துள்ளனர்.

ஆனால், அவர்களது சாதியை காரணம் காட்டி, அங்குள்ள எவரும் வீடு தராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக, தினமும் 70 கி.மீ பயணித்து, பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.

இந்த பிரச்னை குறித்து பேசிய உடுப்பி துணை ஆணையர் வித்யாகுமாரி, பைந்தூரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தங்குமிடங்களில், கோரகா பழங்குடியினத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களைத் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News