நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் பிகார் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான அரசு, மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த போவதாக தெரிவித்தது.
பீகாரை தொடர்ந்து, ஆந்திராவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். இதற்கு, அமைச்சரவையும் ஒப்புதல் அளித்த நிலையில், வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி ஆந்திரத்தில் விரிவான சாதிவாரி கணக்கெடுப்புப் பணி தொடங்கும் என மாநில செய்தி மற்றும் பொதுத் தொடா்புத் துறை அமைச்சர் ஸ்ரீநிவாச வேணுகோபால கிருஷ்ணா தகவல் தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே 2 நாள்கள் சோதனை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.