அஜித் ரசிகர்களை குஷிப்படுத்திய கேத்ரின் தெரசா!

மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. இந்த படத்திற்கு பிறகு, அருவம், கலகலப்பு 2 போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

தற்போது, சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தில், கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், நடிகை கேத்ரின் தெரசா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், கதையே இல்லை என்றாலும், எந்த நடிகருடன் நடிப்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர், நடிகர் அஜித்துடன் அவ்வாறு நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், குட் பேட் அக்லி படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றும், விரைவில பார்க்க போகிறேன் என்றும், அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News