பீகார் மாநிலம் அரா பகுதியில், பிரபல தனியார் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடை வழக்கம் போல், இன்று காலை 10.30 மணிக்கு திறக்கப்பட்டுள்ளது.
அப்போது, முகமூடி அணிந்துக் கொண்டு, துப்பாக்கியுடன் வந்த 6 நபர்கள், வாடிக்கையாளர்களையும், நகைக்கடையின் ஊழியர்களையும் மிரட்டியுள்ளனர். இதையடுத்து, நகைக்கடையில் இருந்து 25 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்ற அவர்களை, காவல்துறையினர் பிடிக்க முயன்றுள்ளனர். இந்த முயற்சியின்போது, கொள்ளையர்களில் 2 பேர், காயம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.