Connect with us

Raj News Tamil

காவிரி விவகாரம்: மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்!

தமிழகம்

காவிரி விவகாரம்: மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்!

காவிரி விவகாரத்தில், மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்.9) தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வினாக்கள் விடைகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

பின்னர், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது: தமிழகத்துக்கு இதுவரை 9.19 டிஎம்சி தண்ணீர் வர வேண்டிய நிலையில் இதுவரை 2.18 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது.

தமிழகத்துக்கு கர்நாடக அரசு முறையாக தண்ணீர் திறக்கவில்லை. காவிரி ஆற்றில் செயற்கையான நெருக்கடியை கர்நாடகம் உருவாக்கி வருகிறது என்றும் காவிரியில் தண்ணீர் திறக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை குறிப்பிட்டும் ஸ்டாலின் பேசினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்துக்காக போராடி வருகிறோம். சம்பா பயிர்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.

காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்ட ஜூலை 17ஆம் தேதி முதல் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் செயற்கையான நெருக்கடிய கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கான காவிரி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாத வாரியாக தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தினோம் என்றார்.

More in தமிழகம்

To Top