மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பழங்குடியின குழுக்களுக்கு இடையே, கடந்த மே மாதத்தின்போது, கலவரம் நடந்தது. இந்த கலவரத்தில் இருதரப்பிலும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இவ்வாறு இருக்க, கடந்த மே 4-ஆம் தேதி அன்று, இரண்டு பெண்கள், நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த வழக்கை, சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி, மத்திய அரசு உத்தரவிட்டது.
இவ்வாறு இருக்க, தனது விசாரணையை முடித்துள்ள சி.பி.ஐ, நேற்று சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றத்தில் குற்றப்பாத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அதில், ஹுயிரம் ஹெரோடாஸ் உள்ளிட்ட 6 பேர் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில், குற்றவாளிகளாக கருதப்பட்டவர்கள் மீது, கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை, பெண்களின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.