Connect with us

Raj News Tamil

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

இந்தியா

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

12-ஆம் வகுப்பு கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 87.33 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 87.98 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். சென்னை மண்டலத்தின் தேர்ச்சி விழுக்காடு 98.47 சதவீதமாக உள்ளது.

இந்நிலையில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான சில மணி நேரங்களில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது.

இதில், சென்னை மண்டலம் 99.30 சதவீதத்துடன் மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

திருவனந்தபுரம் 99.75 சதவீதத்துடன் முதல் இடமும் விஜயவாடா 99.60 சதவீதத்துடன் இரண்டாவது இடமும் பிடித்துள்ளனது.

மொத்த தேர்ச்சி விதம் 93.60 கடந்த ஆண்டு காட்டிலும் 0.48 சதவீதம் அதிகமாகும்.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களை காட்டிலும் மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.75 சதவீதமும் மாணவர்கள் 92.71 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top