ஈரோடு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் முன்னிலை : லட்டு வழங்கி தொண்டர்கள் கொண்டாட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னலையில் உள்ளார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஈரோட்டில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டில், தொண்டர்கள் அவருக்கு லட்டு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.