பிராந்திய மொழிகளில் உள்ள பாடப்புத்தகங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது: பிரதமர் மோடி!

பிராந்திய மொழிகளில் உள்ள பாடப்புத்தகங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ரோஸ்கர் வேலை வாய்ப்பு மேளாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

நிதி ஆயோக் அறிக்கை படி, கடந்த 5 ஆண்டுகளில் வறுமைக் கோட்டின் கீழ் இருந்து, 13.5 கோடி மக்கள் விடுபட்டிருக்கிறார்கள்.

வருமான வரி தாக்கலை அடிப்படையாகக் கொண்ட அறிக்கை, கடந்த 9 ஆண்டுகளில் மக்களின் சராசரி வருவாய் உயர்ந்திருப்பதாகக் கூறுகிறது. பிராந்திய மொழிகளில் உள்ள பாடப்புத்தகங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.

2014ம் ஆண்டுக்கு முன்பெல்லாம் நடந்த ஊழல்களை மக்களால் மறக்க முடியாது. மக்கள் வரி செலுத்த முன் வருகிறார்கள். மக்கள் அதிகம் பேர் வரி செலுத்துவதற்கான காரணம், வரி பணம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. இது மக்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

Recent News