உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த தீபா தேவி என்பவர் ஆன்லைன் டெலிவரி தளத்தில் அமுல் ஐஸ்கிரீமை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே ஐஸ்கிரீம் டெலிவரி செய்யப்பட்டது.
ஐஸ்கிரீமை திறந்த அவர் அதில் பூரான் ஒன்று உறைந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.இதையடுத்து ஆன்லைன் டெலிவரி தளத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக்கொண்ட ஆன்லைன் டெலிவரி தளம், அமுல் தரப்பில் இந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.
ஐஸ்கிரீமிற்கான தொகையையும் அந்த ஆன்லைன்தளம் தீபாவிடம் திருப்பி வழங்கியுள்ளது. ஆனால் இந்த புகார் தொடர்பாக அமுல் நிறுவனத்திடமிருந்து தனக்கு எந்த தொடர்பும் வரவில்லை என்று தீபா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் மும்பையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் ஒன்று கிடந்தது. அந்த வீடியோ பெரும் வைரலானது. இந்நிலையில் தற்போது ஐஸ்கிரீமில் பூரான் கிடந்த சம்பவம் ஐஸ் கிரீம் பிரியர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுக்கு ஒரு முடிவே இல்லையா??
— Raj News Tamil (@rajnewstamil) June 16, 2024
ஆன்லைனில் வாங்கிய ஐஸ்கிரீமில் பூரான்..!! #UttarPradesh #IceCream #OnlineShopping #RajNewsTamil pic.twitter.com/5l90JZjY42