கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பாஜக வெற்றிப் பெற்று, 3-வது முறையாக ஆட்சி அமைத்தது. இதையடுத்து, ஜூலை மாதம் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
3-வது முறையாக தொடர்ச்சியாக நிதியமைச்சராக பதவி வகித்துள்ள நிர்மலா சீதாராமன், 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மேலும், பாஜக ஆட்சி அமைத்த பின், 2-வது முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு, மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து, குடியரசு தலைவரை நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.
அங்கு, நிதியமைச்சருக்கு, குடியரசு தலைவர் இனிப்பு வழங்கினார். இதையடுத்து, நாடாளுமன்றத்திற்கு செல்லும் நிதியமைச்சர், காலை 11 மணி அளவில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
மேலும், இந்த பட்ஜெட்டில், வருமான வரி உச்ச வரம்புகளில் மாற்றம் போன்ற முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.