மீனவர்கள் மீது தாக்குதல்.. இந்திய அரசு கடும் கண்டனம்..

புதுச்சேரியில் உள்ள காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 13 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும், அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

இதுமட்டுமின்றி, மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு, இந்திய அரசு தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

அதாவது, டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து, மத்திய அரசின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச் சூட்டால் காயம் அடைந்த மீனவர்களை, இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் நேரில் சந்தித்ததாகவும், வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News