Connect with us

Raj News Tamil

அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி?…கட்சி மேலிடம் ஆலோசனை

அரசியல்

அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி?…கட்சி மேலிடம் ஆலோசனை

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 296 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களைக் கைப்பற்றியது.

இந்த தேர்தலில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த எல்.முருகன், ராஜிவ் சந்திரசேகர், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் தோல்வி அடைந்தனர்.

இதற்கிடையே, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோரது அழைப்பின் பேரில் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அங்கு அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

புதியவர்களை மந்திரிகளாக நியமிக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ள நிலையில், அந்தப் பட்டியலில் அண்ணாமலை பெயரும் இடம் பெற்றுள்ளது எனவும், அவருக்கு ஒரு முக்கிய துறை கொடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top