மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு! – சென்னை வானிலை மையம்

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்.

ஜனவரி 1, 2 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 3, 4ம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

இன்று முதல் 2ம் தேதி வரை, குமரிக்கடல் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் 2ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News