நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில், பல இடங்களில் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று நண்பகல் வரை கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் பதிவாகும். அரபிக்கடல் பகுதிகளுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக் கடலில், தென் மாவட்ட கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் ஒட்டிய பகுதிகளில், மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் நாளை முதல், 18ம் தேதி வரை, மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.