தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த  வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிட்ட அறிவிப்பில்,

அரபிக் கடலில் லட்சத்தீவு அருகில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக் கடல், அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் சனிக்கிழமை (ஜன.6) ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேசமயம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

RELATED ARTICLES

Recent News