ஆந்திரா மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்த சந்திரபாபு நாயுடு ஆட்சியை கைப்பற்றினார்.
மக்களவையுடன் சேர்த்து ஆந்திரம், ஒடிஸா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும், 16 மாநிலங்களில் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநிலப் பேரவைகளின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) முடிவுக்கு வர இருந்ததால், அவ்விரு மாநிலங்களில் மட்டும் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 2 மாநிலங்களிலும் ஆளுங்கட்சி (பாஜக, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா) ஆகியவை ஆட்சியைத் தக்கவைத்தன.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
ஆந்திராவில் உள்ள மொத்த சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியை தக்க வைக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே தெலுங்கு தேசம்- பாஜக கூட்டணி கட்சி 160 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.
இதன்மூலம் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கடந்து முன்னிலையில் இருப்பதால் தெலுங்குதேசம் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது.