ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கிய இப்படம் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்ததோடு வசூலையும் வாரி குவித்தது.
இதையடுத்து 13 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் செப்.28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தில் நடன கலைஞரும் இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ளார்.
சந்திரமுகி 2 திரைப்படம் வரும் நவம்பர் மாதம் பிரபல OTT தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.