கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது. குறிப்பாக வடிவேலுவின் காமெடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் வடிவேலு, கங்கனா ரணாவத் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன், சிஷ்டி டாங்கே, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பாகுபலி. RRR படங்களுக்கு இசையமைத்த எம்.எம்.கீரவாணி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 27 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராகவா லாரன்ஸ் படங்களில் அதிக தொகைக்கு கொடுத்து வாங்கப்பட்ட படமாக சந்திரமுகி 2 உருவாகியுள்ளது.
சந்திரமுகி 2 விநாயகர் சதுர்த்தியை(செப்.15) அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.