நம்ம சொர்ணாவா இது? ரசிகர்கள் அதிர்ச்சி!

பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2005-ஆம் ஆண்டு அன்று வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் மனதில் பதியும் படி வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அந்த வகையில், வடிவேலுவின் மனைவியாக நடித்திருக்கும் சொர்ணா என்ற கதாபாத்திரம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை சொர்ணா மேத்திவ், தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

சிவப்பு நிற புடவை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம், இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மேலும், “நம்ம சொர்ணாவா இது” என்றும் ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.