தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், கடந்த சில நாட்களுக்கு முன் பண்ணை இல்லத்தில் உள்ள குளியலறையில் தவறி கீழே விழுந்தார். உடனடியாக அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இந்த பரிசோதனையில் இடதுபக்க இடுப்பு எலும்பு முறிந்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சந்திரசேகர் ராவுக்கு இடது இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் உடல்நிலை தேறியதை அடுத்து இன்று மருத்துவமனையில் இருந்து சந்திரசேகர் ராவ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆறு முதல் எட்டு வாரங்களில் சந்திரசேகர ராவ் பூரண குணமடைவார் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.