Connect with us

Raj News Tamil

ரத்தம் வெளியீட்டில் மாற்றம் ! போஸ்டரை பதிவிட்ட விஜய் ஆண்டனி!

சினிமா

ரத்தம் வெளியீட்டில் மாற்றம் ! போஸ்டரை பதிவிட்ட விஜய் ஆண்டனி!

இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனங்களை ஈர்த்தது.

இப்படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி , ‘ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

அந்த போஸ்டரில், “சாத்தியமில்லாத எல்லாத்தையும் நீக்கிட்டா மிஞ்சிறது நம்ப முடியாத ஒன்னாருந்தாலும் அதான் உண்மை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இவரின் போஸ்டரை பலரும் ஷேர் செய்து ,கமெண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top