வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.35.79 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் மீது 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதே போல உயர்கல்வித்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் இருந்தபோது ரூ.45.20 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.பி.அன்பழகன் மீதும் அவருடைய மனைவி மற்றும் மகன்கள் மீதும் 10,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.