இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா, அடுத்தாண்டு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என, பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
இங்கிலாந்தின் நீண்ட காலம் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் 8-ந் தேதி காலமானார். இதையடுத்து, அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக ஆனார்.
இந்த நிலையில், மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில், மன்னர் சார்லஸ் அவரது மனைவியுடன் முடிசூட்டப்படுகிறார். இதன்மூலம், அரசராக அவரது ஆட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்க இருக்கிறது.
74 வயதாகும் மூன்றாம் சார்லஸ், இங்கிலாந்தின் வரலாற்றில் முடிசூடும் மிக வயதான மன்னர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.