இந்த சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபட்டால் நிச்சயம் நடவடிக்கை – செங்கல்பட்டு எஸ்பி எச்சரிக்கை

ஆங்கில புத்தாண்டு 2023 இன்று நள்ளிரவு துவங்க உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தமிழகத்தின் பல்வேறு ஏற்பாடுகள் ஆங்காங்கே செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி பிரதீப் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் : இன்று 30.12.2022 இரவு 7 மணி முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான இசிஆர், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி சாலைகள் மற்றும் மாவட்டத்தின் பல முக்கிய சந்திப்புகள் உட்பட மொத்தம் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இசிஆர், ஓஎம்ஆர் மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பீச் ரெசார்ட் உணவகங்களில் புத்தாண்டு கொண்டாட்டமானது 01.01.2023 தேதி 1மணி மேல் எந்தவித நிகழ்ச்சியும் கொண்டாட்டங்களும் நடத்தக்கூடாது. பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தல் கூடாது. மதுபோதையில் வாகனத்தை இயக்கக்கூடாது. மீறினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வானத்தை பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News