சென்னை 46-வது புத்தக கண்காட்சி அறிவிப்பு..!

சென்னையில் ஆண்டுதோறும் புத்தக பிரியர்களுக்கு என்று புத்தக கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு 45-வது புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்தப்பட்டது. இந்த நிலையில் 46 வது புத்தக கண்காட்சி வரும் சனவரி 6 முதல் 22 வரை நடத்தப்படவுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய பபாசி செயலாளர் முருகன், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தக கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் முதல்வர் ஸ்டாலின் தேதியை உறுதி செய்த பின்னர் திறப்பு விழா போன்ற தேதிகள் மாற்றி அமைக்கப்படும் என்றார்.