சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களுடைய 17-வயது மகன் கிருஷ்ணகுமார் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு முடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 30-ஆம் தேதி மேற்படிப்பிற்காக கலந்தாய்வுக்கு சென்று வீடு திரும்பிய கிருஷ்ணகுமார். இரவு 10-மணியளவில் நைலான் கயிற்றை பயன்படுத்தி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதையடுத்து மாணவனின் தாய் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், கிருஷ்ணகுமார் வீட்டின் அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விசாரணையை திருப்பினர்.
அப்போது அவர் படித்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஷர்மிளா என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. பின்னர் இவரின் மொபைல் போனை ஆய்வு செய்ததில் ஷர்மிளாவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
அதனால் மனவேதனையில் இருந்த மாணவன் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. பின்னர் ஆசிரியை ஷர்மிளாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்