நாய்கள், மாடுகள், பூனைகள் ஆகியவை, பெரும்பாலும் வளர்ப்பு பிராணிகளாக இருந்து வருகிறது. இதில், நாய்கள், மாடுகள் ஆகியவை, வெளியே சுற்றித் திரியும்போது, சில சமயங்களில் பொதுமக்களை தாக்கிவிடுகின்றன.
இதுமாதிரியான சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருவதால், அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று, பொதுமக்கள் கூறி வந்தனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வளர்ப்பு நாய்களை வைத்திருப்போர், அவைகளை வெளியே கொண்டு வரும்போது, வாய் மூடியுடன் தான் வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறு வரவில்லையென்றால், ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.