சென்னை மாநகராட்சியின் தெரு பெயர்களின் மீது சுவரொட்டிகள் ஒட்டி வருவதால் சாலையின் பெயர் தெரியாமால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே தெரு பெயர்கள் உள்ள பதாகைகள் மீது சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் சாலை, தெரு பெயர்களில் சுவரொட்டி ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டவோ விளம்பர பதாகை வைக்க கூடாது என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
எச்சரிக்கையை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.