தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவின் ஆதியாக இருந்தது கோலிவுட் என்று அழைக்கப்படும் சென்னை நகரம் தான்.
ஆனால், அந்த சென்னை மக்களின் வாழ்வியல் என்பது, அதே சினிமாவில் தவறாக மட்டுமே சித்தரிக்கப்பட்டு வந்துள்ளது.
இவர்களின் வாழ்க்கை அவ்வளவு வன்முறை நிறைந்ததா? அல்லது அவர்கள் மிகவும் மூர்க்கத்தனமான நபர்களா? போன்ற கேள்விகள், சென்னையின் உண்மை முகம் அறியாத பலரது மனதிலும் எழும் கேள்விகள்.
இந்த கேள்விகளுக்கான பதில்களை தேட ஆரம்பித்தால், அதற்கு இல்லை என்று தான் விடை சொல்ல வேண்டியிருக்கும். இருப்பினும், அவர்களின் வாழ்க்கை சினிமாவில் மிகவும் மோசமான வகையிலேயே சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக சென்னை வாசிகள் என்றாலே, லுங்கி கட்டிக் கொண்டும், முகத்தில் மரு வைத்துக் கொண்டும், நம்ம நம்பியாரின் அடியாட்களாகவும் மட்டுமே திரையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இருப்பினும், அத்தி பூத்தார்போல், வெற்றி மாறன், பா.ரஞ்சித் போன்ற ஒரு சில இயக்குநர்கள், பொது சமூகத்தின் அந்த பார்வையை மாற்றி, சென்னை மக்களை நல்ல முறையில் காட்டியிருக்கிறார்கள்.
மெட்ராஸ் தினம் கொண்டாடும் இந்த வேளையில், அந்த மக்களை உண்மையாக புரிந்துக் கொள்ளும் நாள் எப்போது வரும் என்ற கேள்வியோடு..