“தயிர் சாப்பிடக் கூடாது” – மருத்துவர் கூறிய அறிவுரை! இணையத்தில் எழுந்த சலசலப்பு!

இந்தியர்களின் உணவு கலாச்சாரத்தில், தயிர் என்பது மிகவும் முக்கிய பங்கு ஆற்றி வருகிறது. ஒருசிலர், தயிரை தினமும் பயன்படுத்தி வருவதை நாம் பார்த்திருப்போம். இவ்வாறு இருக்க, சென்னையை சேர்ந்த மருத்துவர் கவிதா தேவ், தனது எக்ஸ் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ இந்த மாதிரி தயிரை உண்ணாதீர்கள்.

இரவில் தயிரை உண்ணாதீர்கள். இது சளித்தொல்லை மற்றும் செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும்.

தயிரை தினமும் உண்ணாதீர்கள். இது ரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும்.

    எனவே எப்படி தயிரை உண்ண வேண்டும்:-

    வாரத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிடலாம்

    மதிய நேரத்தில் சாப்பிடலாம்

    குறைந்த அளவில் சாப்பிட வேண்டும்

    தயிரை சூடுபடுத்தக் கூடாது ” என்று கூறியிருந்தார். இவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்களும், சில மருத்துவர்களும், பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்த தீபக் கிருஷ்ணமூர்த்தி, தனது எக்ஸ் பக்கத்தில், கவிதா தேவ்-க்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    அவரது பதிவில், “ பல நூற்றாண்டுகளாக பெரும்பாலான தென்னிந்தியர்கள், தயிரை தினமும் உண்டு வந்துள்ளனர். திடீரென சூடோ அறிவியல் பேசும் ஒருவர் தயிர் உடலுக்கு கேடு என்று கூறுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், AA என்ற எக்ஸ் கணக்கில் இருந்தும், இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “செரிமானத்திற்கு தயிர் சிறந்தது கிடையாதா? நான் இப்பதான் படிச்சேன்? தயிர் செரிமானத்திற்கு சிறந்தது அல்ல என்பதை படித்ததும் வாய்விட்டு சிரித்துவிட்டேன்.

    ஏனென்றால், தயிரில் Probiotics உள்ளது. இதில் வாழும் பாக்டீரியாக்கள் நமது குடல் சார்ந்த நலத்திற்கு உதவி புரியும்” என்று கூறினார்.

    தொடர்ந்து, “பெண் மருத்துவரின் கூற்றுப்படி, ‘நாம் மோரை தினமும் சாப்பிடலாம். ஆனால், தயிரை சாப்பிடக் கூடாது, தயிரை சூடு படுத்தவும் கூடாது?’ தயிர் கறி எப்படி ஒருவரால் சமைக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

    “என்ன நடக்கிறது? ஏன் இந்த பைத்தியங்களை ட்விட்டர் தடை செய்யாமல் உள்ளது?” என்று கூறியுள்ளார்.

    RELATED ARTICLES

    Recent News