கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்டு வந்த ஆபரண தங்கத்தின் விலை இன்று( மே01) சவரனுக்கு ரூ.920 குறைந்தது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில், சவரனுக்கு ரூ.920 குறைந்து, ரூ.53,080 ஆகவும், ஒரு கிராம் ரூ.115 குறைந்து ரூ.6,635 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையும் 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.86.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.