Connect with us

Raj News Tamil

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் டி.குகேஷ்

விளையாட்டு

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் டி.குகேஷ்

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் தமிழகத்தின் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்’ சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெற்று வந்தது. கடந்த 15-ம் தேதி தொடங்கிய இந்தத் தொடரின் கடைசி மற்றும் 7-வது சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றன.

இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், சகநாட்டைச் சேர்ந்த மற்றொரு கிராண்ட் மாஸ்டரான ஹரிகிருஷ்ணாவை எதிர்த்து விளையாடினார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 31-வது நகர்த்தலின் போது டிரா செய்தார்.

கடைசி சுற்று முடிவில், கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் ( 2 வெற்றி, 5 டிரா ), அர்ஜூன் எரிகாசி (3 வெற்றி, 1 தோல்வி, 3 டிரா) ஆகியோர் தலா 4.5 புள்ளிகள் பெற்றிருந்தனர்.

வெற்றி, தோல்வி, டிரா கணக்கிட்டு புள்ளிகள் வழங்கியதில் முதலிடத்தை பிடித்த குகேஷ்க்கு ரூ.15 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top