தமிழக அரசின் மதுபான நிறுவனமான டாஸ்மாக் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக, அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும, பாஜகவினர் இந்த ஊழல் சம்பவத்தை கண்டித்து, போராட்டம் நடத்த முயன்றனர். இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக, விசாரணை நடத்துவதற்கு, அமலாக்கத்துறையினருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்த மார்ச் 25 வரை தடை விதித்துள்ளது. மேலும், அமலாக்கத்துறையினர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.