திருப்பரங்குன்றம் மலையை காப்பாற்றுவதற்காக, வடசென்னை பகுதியில், வேல் யாத்திரை நடத்த வேண்டும் என்று கூறி, பாரத் இந்து முன்னணி சார்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்து வந்தனர்.
அப்போது, இந்துக்களும், முஸ்லீம்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை காரணமாக கூறி, அந்த ஒற்றுமையை குலைக்கக் கூடாது என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, பாரத் இந்து முன்னணி தரப்பிலும் வாதம் முன்வைக்கப்பட்டது. இவ்வாறு இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வேல் யாத்திரை செல்ல அனுமதி மறுத்து, இன்று வழக்கை தள்ளுபடி செய்தது.