கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக கைது செய்த செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் 2 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்சிய விவகாரத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கு தற்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த கோவிந்தராஜ், தாமோதரன் ஆகிய 2 பேர், ஜாமீன் கோரி, மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீது விசாரணை நடந்தபோது, இருதரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டனர்.
இதையடுத்து, மறு உத்தரவு வரும்வரை, விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்று கூறி, குற்றவாளிகளுக்கு நிபந்தனை ஜாமீனை, நீதிபதிகள் வழங்கினர்.