இரட்டை இலை சின்னம் யாருக்கு? EPS-ன் மனு தள்ளுபடி! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

அதிமுக உட்கட்சி விவகாரங்களில், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரி, எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு தடை விதித்தது.

ஆனால், OPS-ன் மகனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் தரப்பிலும், புகழேந்தி தரப்பிலும், தடையை நீக்கக் கோரி, புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

அதன்படி, அதிமுக உட்கட்சி விவகாரங்களில், விசாரணை நடத்துவதற்கு, தேர்தல் ஆணையத்திற்கு விதித்த தடையை, சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும், எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி. பழனிசாமி உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News