Connect with us

Raj News Tamil

சென்னை குப்பை மாநகரமாக இருக்கிறது: அண்ணாமலை!

தமிழகம்

சென்னை குப்பை மாநகரமாக இருக்கிறது: அண்ணாமலை!

தமிழகத்தின் தலைநகரான சென்னை, குப்பை மாநகரமாக இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை வகித்து அண்ணாமலை பேசியதாவது:

வரும் மக்களவைத் தேர்தலில் மோடி நிச்சயம் வெற்றி பெறுவார். நாடு முழுவதும் பெருநகரங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால், தமிழகத்தின் தலைநகரான சென்னை, குப்பை மாநகரமாக இருக்கிறது. இந்த ஆண்டு தூய்மை இந்தியா பட்டியலில் சென்னை 199-வது இடத்துக்குச் சென்றிருக்கிறது. காரணம், சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளையும், 3 குடும்பங்கள் ஆட்சி செய்வதுதான்.

பாஜக ஆட்சிக்கு வராவிட்டால், தமிழகத்தின் முழு கட்டமைப்பையும் திமுகவின் குடும்ப ஆட்சி கரையான்போல செல்லரித்துவிடும். குடும்ப ஆட்சி, சாதி, லஞ்சம், அடாவடி ஆகிய 4 கால்கள் கொண்ட நாற்காலியில்தான் திமுக உட்கார்ந்திருக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் மோடியை ஏற்றுக்கொண்டு யாரெல்லாம் வருகிறார்களோ, அவர்களுக்கு கதவு திறந்திருக்கும்.வெற்றியின் விளிம்பில் இருக்கிறோம். பாஜகவினர் தேனீக்களைப்போல பணியாற்ற வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் 25 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

More in தமிழகம்

To Top