சென்னை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்!

மெட்ரோ ரயில் சேவை சிக்னல் மற்றும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சிக்னல் மற்றும் தொழில் நுட்ப கோளாறு மற்றும் சிக்னல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

சின்னமலை முதல் ஆலந்தூர் வரையில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக விம்கோ நகர் முதல் சின்னமலை வரையில் நீல நிற வழித்தடத்தில் மெட்ரோ இயக்கப்படுகிறது. ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரையில் லூப் லைனில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் தங்களின் பயணங்களை அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம்.

RELATED ARTICLES

Recent News