பெண்கள் மது அருந்துவது தவறா? – பொங்கியெழுந்த கலாச்சார காவலர்கள்! உண்மை என்ன?

சென்னை நந்தனம் பகுதியில், பிக்-புல் என்ற மதுபான பார் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பாரில், நேற்று இரவு மதுபான பார்ட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில், ஆண்கள், பெண்கள் என்று பல்வேறு தரப்பினர், மது அருந்தி, பார்ட்டியை கொண்டாடியுள்ளனர்.

ஆனால், அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி, நள்ளிரவு நேரம் வரை, பார்ட்டி தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர்.

மேலும், பாரை மூடச் சொல்லி, நிர்வாகத்தின் கடுமையாக எச்சரித்துள்ளனர். பின்னர், பார்ட்டியில் கலந்துக் கொண்ட ஆண்களும், பெண்களும், அங்கிருந்து கிளம்பினர். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக, பார் நிர்வாகத்தினர் விளக்கம் அளித்தனர்.

அதில், சம்பவத்தன்று 5 பேர் கொண்ட கும்பல் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் தங்கள் பாருக்குள் நுழைய முயன்றதாகவும், அதனை தடுத்ததால் போலீசாரையும் மீடியாக்களையும் வரவழைத்து பிரச்சனையை பெரிது படுத்தி விட்டதாகவும், தங்கள் பாரில் தவறான செயல்கள் ஏதும் நடை பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

என்ன தான் இருந்தாலும், அரசு அனுமதித்த நேரத்தை காட்டிலும், கூடுதல் நேரம் பாரை இயக்கியது தவறு தான் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில், ஒரு சில நெட்டிசன்களின் கருத்து மிகவும் கீழ்த்தரமான முறையிலேயே இருந்து வந்துள்ளது.

அதாவது, நள்ளிரவில், பெண்கள் அரைகுறை ஆடையுடன், பார்ட்டி செய்வது தவறு என்றும், பெண்கள் மது அருந்துவது தவறு என்றும், பூமர் தனமாக பேசி வருகின்றனர். ஆண்கள் குடிப்பது தவறு என்றால், பெண்கள் குடிப்பதும் தவறு தான்.

குடிக்க வேண்டாம் என்று சொல்வது, ஆண்-பெண் இருவரையும் குறிப்பிட்டு சொல்வதாக இருக்க வேண்டும். மேலும், பெண்களின் உடை சுதந்திரம் குறித்து, பல ஆண்டுகளாவும், பக்கம் பக்கமாக கட்டூரையை பலர் எழுதி வந்த போதிலும், அதுதொடர்பாக விமர்சனம் செய்யும் வகையில், தொடர்ச்சியாக பல ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆண்களும், ஒருசில பெண்களும் இதற்கு சாதகமாக இருப்பதால், இவ்வாறான கண்டென்டுகள், Youtube சேனல்களில், சர்வசாதாரணமாக வெளியிடப்படுகிறது.

சில மீடியாக்களிலும், நள்ளிரவு பாரில் மது அருந்திய பெண்கள், ராக்குடி ரங்கீலாக்கள் ஓட்டம், பக்காடி அக்கா பாரு என்றெல்லாம், நாகரீகமற்ற முறையில் தலைப்பு வைத்து, கிண்டலடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News