சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே, கடந்த 28-ஆம் தேதி அன்று, ஐ.பி.எல் இறுதிப் போட்டி நடைபெற இருந்தது. ஆனால், அங்கு பெய்த மழை காரணமாக, போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதனால், மாற்று நாளான நேற்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில், 214 ரன்கள் எடுத்திருந்தது. 215 ரன்கள் என்ற இலக்கை நோக்கி, சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்தை தொடங்கியது. ஆனால், மீண்டும் ஏற்பட்ட மழை காரணமாக, போட்டி முதல் ஓவர் முடியும் முன்பே, பாதியில் நிறுத்தப்பட்டது.
பின்னர், 12 மணிக்கு மேல், மழை அனைத்தும் நின்ற பிறகு, 15 ஓவர்கள் மட்டும் வீசப்படும் என்றும், 171 ரன்கள் இலக்கு என்றும், நிர்ணயம் செய்யப்பட்டு, ஆட்டம் தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய கான்வே, ருத்துராஜ் கொய்க்வாட் ஆகியோர், தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.
அதன்பிறகு, இந்த இரண்டு விக்கெட்டுகளும் வீழ்ந்து, ரஹானே-வும், அம்பத்தி ராயுடுவும், தங்களது பங்கிற்கு, அதிரடி ஆட்டத்தை வழங்கினர். பின்னர், இவர்களது விக்கெட்டும் சரிந்தபோது, தோனி களத்தில் இறங்கினார்.
ஆனால், இந்த ஆட்டத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி, முதல் பந்திலேயே ஆட்டமிழந்து, ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை வழங்கினார். இதனால், நம்பிக்கை இழந்த சென்னை ரசிகர்கள், ஜடேஜாவின் ஆட்டத்திற்கு பிறகே, நிமிர்ந்த உட்கார ஆரம்பித்தனர்.
யாரும் எதிர்பார்க்காத வகையில், அபாரமாக விளையாடிய ஜடேஜா, கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில், ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து, அணியை வெற்றி பெற வைத்தார்.
ஒரு த்ரில்லர் படத்தை மிஞ்சும் வகையில் இருந்த இந்த போட்டி, ஐ.பி.எல் வரலாற்றில், சிறப்பாக தருனங்களில் ஒன்றாக நிச்சயம் அமையும். சி.எஸ்.கே அணியின் இந்த 5-வது வெற்றியை, சென்னை அணியின் ரசிகர்கள், கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.