டாடா ஐபிஎல் 2024 இன் 46-வது போட்டி நேற்று சென்னை MA சிதம்பரம் மைதானத்தில் நடந்தது அதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்நியக்கபட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேரில் மிட்செல் ஜோடி தொடக்கம் முதலே தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் டேரல் மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்கள் சேர்க்க சிறப்பாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் 54 பந்துகளில் 98 ரன்கள் சேர்த்து இரண்டு ரன்களில் சதத்தை தவறவிட்டார். இறுதியில் சிவம் துபே வழக்கம் போல் அதிரடியாக ஆடி நான்கு சிக்சருடன் 20 பந்துகளின் 39 ரன்கள் சேர்க்க தோனி ஒரு பவுண்டரியுடன் இரண்டு பந்துகளில் ஐந்து ரன்கள் அடித்து 20 ஓவர் முடிவில் 212 எடுத்திருந்தனர் .
பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடகமுதலே தடுமாறி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதில் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் 13 ரன்களிலும் அன்மோல்பிரீத் சிங் டக் அவுட் ஆக அடுத்தடுத்து வெளியேறினர் பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அபாரமாக பந்து வீசிய சென்னை அணி பந்து வீச்சாளர் துஷர் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் மேலும் பதிரானா மற்றும் ரஹ்மான் 2 விக்கட்க்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர் இறுதியாக 18.5 ஓவர்களில் 134 மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது பின்னர் 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை சென்னை ரசிகர்கள் மிகுந்த ஆரவாரதுடன் கொண்டாடிய நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை சிஎஸ்கேவிடம் வெற்றி பெற்றது இல்லை ஆனால் தற்போது சன்ரைசர்ஸ் அணி பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் இந்த தோல்வி பயணம் முடிவுக்கு வரும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த அந்த அணியின் உரிமையாளர் காவியா மாறனின் கனவு பலிக்காமல் போனதால் கவியா ஆர்மி ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.