வெள்ளக்காடாக மாறிய சென்னை; சுரங்கப் பாதைகள் மூடல்!

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் 47 ஆண்டுகளில் இல்லாத அதி கனமழை பெய்து வருகிறது.

இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக மாறியது.

சென்னையில் உள்ள பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகரப் பகுதிக்ளுக்கு உள்பட்ட 14 சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை
  2. கெங்குரெட்டி சுரங்கப்பாதை
  3. மேட்லி சுரங்கப்பாதை
  4. பழவந்தாங்கல் சுரங்கப்பாதை
  5. ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை
  6. தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை
  7. சி.பி. சாலை சுரங்கப்பாதை
  8. வில்லிவாக்கம் சுரங்கப்பாதை
  9. பெரம்பூர் செம்பியன் சுரங்கப்பாதை
  10. கணேசபுரம் சுரங்கப்பாதை
  11. வியாசர்பாடி சுரங்கப்பாதை
  12. மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை
  13. துரைசாமி சுரங்கப்பாதை
  14. ஆர்.பி.ஐ. சுரங்கப்பாதை
RELATED ARTICLES

Recent News