செல்போனில் அப்பா சொன்ன விஷயம்.. தூக்கில் தொங்கிய இளம்பெண்! நடந்தது என்ன?

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சிட்லப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் முரளிதரன். இவரது மகள் ஸ்ரீமதி, குரோம்போட்டையில் உள்ள தனியார் கல்லூரியில், பி.காம் படித்து வருகிறார். முரளிதரனும், அவரது மனைவி மற்றும் மகனும், தனது சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு சென்றுள்ளனர்.

தேர்வு நடைபெற்று வருவதால் ஸ்ரீமதி மட்டும், வீட்டிலேயே, தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், தேர்வு எழுத கல்லூரிக்கு சென்ற ஸ்ரீமதி, தேர்வறைக்கு செல்போன் எடுத்து சென்றுள்ளார். இதனை அறிந்த கல்லூரி நிர்வாகம், முரளிதரனை செல்போனில் அழைத்து, மகளை கண்டிக்கும்படி, கூறியுள்ளனர்.

இதையடுத்து, ஸ்ரீமதியிடம் செல்போனில் பேசிய அவர், “இனிமேல் கல்லூரிக்கு செல்போன் எடுத்துக் கொண்டு போகக் கூடாது.. வீட்டிலும் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தக் கூடாது“ என்று கோபமாக பேசி, கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஸ்ரீமதி, வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.