இந்தியவின் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக அதிகார பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணை தலைவருக்கான பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில், புதிய தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் கடந்த 1-ஆம் தேதி முதல் 8-தேதி வரை நடைபெற்றது.
இதில் போட்டியிட்ட ஆர்கடி டிவோர்கோவிச் 157-வாக்குகள் பெற்று 2-வது முறையாக தலைவராக வெற்றிபெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட பாரிஸ்போலெட்ஸ் 16-வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். ஆர்கடி டிவோர்கோவிச் அணியில் உள்ள இந்திய நாட்டின் செஸ் கிராண்ட் மாஸ்டரும் , தமிழ்நாட்டை சேர்ந்தவருமான விஸ்வநாதன் ஆனந்த் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விஸ்வநாதன் ஆனந்த் 5-முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பவர் குறிப்பிடத்தக்கது. மேலும் விஸ்வநாதன் ஆனந்த் 1988-அண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்றார். அது மட்டுமில்லமல் உலகளவில் வேகமாக செஸ் விளையாடக் கூடியவராகவும் திகழ்ந்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்த்தை கவுரவப்படுத்தும் விதமாக இந்திய அரசு 1985-இல் அர்ஜுனா விருது, 1987-இல் பத்மஸ்ரீ விருது, 1991 -1992 ஆம் ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, 2000இல் பத்மபூஷன் விருது, 2007-இல் இந்திய திருநாட்டின் 2-வது உயரிய விருதான பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை வழங்கி பெருமைபடுத்தியுள்ளது.
பத்மவிபூஷன் பெற்ற முதல் விளையாட்டுத் துறையை சேர்ந்தவர் விஸ்வநாதன் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக பதவியேற்று இருப்பது தமிழ்நாட்டிற்க்கும்,இந்தியாவிற்கும் உலகளவில் பெருமை சேர்த்திருக்கிறது.