Connect with us

Raj News Tamil

‘செஸ் உலக கோப்பை’ கடும் நெருக்கடி கொடுத்த பிரக்ஞானந்தா: கார்ல்சன் சாம்பியன்!

விளையாட்டு

‘செஸ் உலக கோப்பை’ கடும் நெருக்கடி கொடுத்த பிரக்ஞானந்தா: கார்ல்சன் சாம்பியன்!

செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்.

‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா – நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் ஆகியோர் மோதினர், இறுதிப்போட்டி இரு கிளாசிக்கல் ஆட்டத்தை கொண்டது. முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.

இந்த நிலையில் இவ்விரு வீரர்கள் இடையே இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று அரங்கேறியது. இதில் ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். அப்போது இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. டிராவின் மூலம் இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்டது. இரு ஆட்டத்தையும் சேர்த்து 1-1 என்று சமநிலையில் இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து வெற்றியாளரை முடிவு செய்ய இன்று டைபிரேக்கர் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் டைபிரேக்கர் சுற்று இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கி பரபரப்பாக நடைபெற்றது.

இதில் மேக்னஸ் கார்ல்சனுக்கு இறுதிவரை கடும் நெருக்கடி கொடுத்து வந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா போராடி தோல்வியடைந்தார்.

இதன் மூலம் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டதை வெற்றுள்ளார்.

More in விளையாட்டு

To Top